ஆசிரியர்களை குஷிபடுத்துவாரா ஸ்டாலின்? எப்போது வெளியாகும் அறிவிப்பு?
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டின் நிதிநிலை மோசமாக இருப்பதால், சில வாக்குறுதிகளை இனி வரும்
காலங்களில் நிறைவேற்றுவோம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்து 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர
ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார், “திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையிலும் இது குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பது கவலை அளிக்கிறது.
No comments:
Post a Comment