எப்போ பாரு கேம், அடிச்சி படிக்க வைங்க... அண்ணன் மீது புகார் கொடுக்க வந்த நெல்லை சிறுமி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

எப்போ பாரு கேம், அடிச்சி படிக்க வைங்க... அண்ணன் மீது புகார் கொடுக்க வந்த நெல்லை சிறுமி

எப்போ பாரு கேம், அடிச்சி படிக்க வைங்க... அண்ணன் மீது புகார் கொடுக்க வந்த நெல்லை சிறுமி

குழந்தைகள் வாய் பேசுவதை ஒரு காலத்தில் கண்டித்து வளர்த்து வந்த பெற்றோர்கள் மாறி இப்போது ரசித்து பார்க்கும் காலமாகிவிட்டது. அதற்கு சமுக ஊடகங்கள் மிக முக்கிய காரணமாக உள்ளது.

குடும்பத்தில் பெரிய ஆட்களை போல மழலைகள் பேசுவதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டால் போதும், சில நாட்களுக்கு அதுதான் ட்ரெண்ட். அந்த மாதிரிதான் நெல்லையில் தற்போது நடந்துள்ள நிகழ்வில்


சிறுமி ஒருவர் தனது அண்ணனை கண்டித்து படிக்க வைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுப்பது வைரலாகியுள்ளது.

தனது அண்ணன் சரியாக படிக்காமல் எப்போதும் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருப்பதாகவும், அவனை அடித்து திருத்துங்கள் என்றும் அந்த சிறுமி நெல்லை தமிழில் பேசுவது அங்கிருப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.

மேலும், என் அண்ணனை அடியுங்கள், நான் எதுவும் சொல்லமாட்டேன் என்று கண்டிஷன் போட, அங்கிருப்பவர்கள் அந்த சிறுமியை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad