என்ன சொல்றீங்க, ஒரு டோஸ் போட்டா போதுமா? ஐ.சி.எம்.ஆர் சூப்பர் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

என்ன சொல்றீங்க, ஒரு டோஸ் போட்டா போதுமா? ஐ.சி.எம்.ஆர் சூப்பர் நியூஸ்!

என்ன சொல்றீங்க, ஒரு டோஸ் போட்டா போதுமா? ஐ.சி.எம்.ஆர் சூப்பர் நியூஸ்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட தடுப்பூசிகள் அனைத்தும் இரண்டு டோஸ் போடப்பட வேண்டும். இந்த இரண்டு டோஸ்களுக்குமான இடைவெளியை கடந்த மே மாதம் மத்திய அரசு அதிகரித்தது.

ICMR ஆய்வு

ஏனெனில் கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் மருந்தின் செயல்திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான நபர்களுக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆய்வு செய்து வந்தது. இதன் முடிவுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ரத்த மாதிரிகள் சேகரிப்பு

அதில், தடுப்பூசி போட்டுக் கொண்ட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சென்னையின் பல்வேறு தடுப்பூசி மையங்களில் இருந்து கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 114 பேர் பங்கேற்றனர்.

முதல்கட்ட ஆய்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களுக்கு கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இது முதல்கட்ட ஆய்வுகள் மட்டுமே.

இதனை உறுதி செய்வதற்காக ஏராளமானோரிடம் ஆய்வு செய்ய வேண்டும். இதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை மேற்குறிப்பிட்ட முடிவுகள் உறுதி செய்யப்பட்டால், இனி வருங்காலங்களில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மட்டும் செலுத்த வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad