பள்ளிகளை திறக்க வேண்டாம்: வெயிட்டான பரிந்துரை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

பள்ளிகளை திறக்க வேண்டாம்: வெயிட்டான பரிந்துரை!

பள்ளிகளை திறக்க வேண்டாம்: வெயிட்டான பரிந்துரை!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டபோது, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது. திறக்கப்பட்ட பள்ளிகளில் சில மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனால், பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை பல்வேறு மாநிலங்களில் குறைந்து வருவதையடுத்து, பள்ளிகள் திறக்க மாநில அரசுகள் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. ஏற்கெனவே சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டும் விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

அதேசமயம், கொரோனா மூன்றாவது அலை தொடர்பான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா 3ஆவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் தொடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.



இந்த நிலையில்,

பள்ளிகள் திறப்பு தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த எய்ம்ஸ் பேராசிரியரும், மருந்து துறையின் தலைவருமான நவீத் விக் பள்ளிகளை அவசரப்பட்டு திறக்க வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளார். எய்ம்ஸ் கோவிட் பணிக்குழுவின் தலைவரான இவர், குழந்தைகள் தொடர்ந்து வீட்டில் இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நாம் அறிவோம். ஆனால் நாம் அபாயங்களையும் பார்க்க வேண்டும். பள்ளிகள் திறப்பு தொடர்பான சாதக, பாதகங்களை பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. போக்குவரத்து, தனிமைப்படுத்தல் மற்றும் சரீர விலகலை உறுதி செய்தல் போன்ற பல சிக்கல்கள் பள்ளிகள் திறப்பில் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad