முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு நிதி: சீமான் வரவேற்பு
தமிழகமெங்கும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் மேம்பாட்டுக்கு 110 விதியின் கீழ் 317.45 கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஸ்டாலின் இன்று பேரவையில் அறிவித்துள்ளார். அத்துடன், இலங்கை தமிழ் பாலிடெக்னிக்
மாணவர்களுக்கு 2,500லிருந்து 10,000 ஆகவும், கலை & அறிவியல் மாணவர்களுக்கு 3000ல் இருந்து 12,000 ஆகவும், இளநிலை
தொழிற்கல்வி மாணவர்களுக்கு 5000ல் இருந்து 20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் என்றும் கூறினார்.
மேலும், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என்றும் 108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், '' தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடு, உட்கட்டமைப்பு, கல்வி, திறன், மேம்பாடு போன்றவற்றிற்காக 317.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே வேளையில், சிறப்பு முகாம்களில் வசிக்கும் ஈழச்சொந்தங்களை முகாம்களுக்கு வெளியே குடியமர்த்தி, அவர்களது நலவாழ்வினையும் உறுதிசெய்து, நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கையான 'முகாம்களே இல்லாத் தமிழ்நாட்டினை' உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்'' என் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment