நெல்லைக்கே தாமிரபரணி நீர் விநியோகமில்லை: போராட்டத்தில் மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

நெல்லைக்கே தாமிரபரணி நீர் விநியோகமில்லை: போராட்டத்தில் மக்கள்!

நெல்லைக்கே தாமிரபரணி நீர் விநியோகமில்லை: போராட்டத்தில் மக்கள்!

நெல்லை மேலச்செவல் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜீவ்காந்தி நகர் புதுக்காலனியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் முறையான வீட்டு வரி, குப்பை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
எனினும் குடிக்கத் தண்ணீர் விநியோகிப்பதில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாகத் தாமிரபரணி ஆற்றுக் குடிநீர் விநியோகிப்பதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக இந்த காரணத்தால் நல்ல தண்ணீர் எடுக்க மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஆழ்துளை குழாயைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் நீர் எடுக்க மெயின்ரோட்டை கடக்க வேண்டியதிருப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து பேரூராட்சியில் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடைய ே இந்தப் பகுதியில்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றும் உள்ளது. ஆனால் அதில் எப்போது நீர் தேக்கப்படுவதில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. உரியத் தீர்வு வழங்கப்படும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad