கொரோனா 3ஆம் அலையைத் தடுக்க இதுதான் ஒரே வழியாம்: திருச்சி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

கொரோனா 3ஆம் அலையைத் தடுக்க இதுதான் ஒரே வழியாம்: திருச்சி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அறிவிப்பு!

கொரோனா 3ஆம் அலையைத் தடுக்க இதுதான் ஒரே வழியாம்: திருச்சி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அறிவிப்பு!

முககவசங்களை அணிந்தால் மட்டுமே கொரோனோ மூன்றாவது அலையைத் தடுக்க முடியும் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்களிடையே போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மதிவாணன் சமூக அக்கரையோடு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கொரோனோ இரண்டாவது அலையிலிருந்து மக்கள் விடுபேற்றாலும் மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என்கிற மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை நமக்கெல்லாம் ஒரு சவாலாகவே உள்ளது.

இதனால் கொரோனா 3ஆவது அலையைத் தடுக்க காவல் ஆய்வாளர் மதிவாணன், “அம்மா மாஸ்க் போடுங்க... தம்பி மாஸ்க் போடுங்க...” என திருச்சியில் உள்ள ஒவ்வொரு சிக்னல்களிலும் கொரோனோ குறித்த விழிப்புணர்வை இவர் ஏற்படுத்தி வருகிறார். இந்த காவலரின் செயல் பொது மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனங்களில் முககவசங்களை அணியாமல் வருபவர்களுக்கு இலவச முககவசங்களை வழங்குவதோடு நாள்தோறும் 10ற்கும் அதிகமான பேருந்துகளில் ஏறி தன் சக போக்குவரத்து காவலர்களின் உதவியோடு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வ ை இவர் ஏற்படுத்தி வருகிறார்.வீட்டுச் சாவி, பணம் மற்றும் மொபைல் போன்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முககவசங்களுக்கும் கொடுங்கள் என இந்த காவல் ஆய்வாளர் மேற்கொள்ளும் பிரச்சார வார்த்தைகள், ரோட்டில் செல்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad