சீனா - அமெரிக்கா இடையே திடீரென்று நடைபெற்ற பேச்சுவார்த்தை! - என்ன விவகாரம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

சீனா - அமெரிக்கா இடையே திடீரென்று நடைபெற்ற பேச்சுவார்த்தை! - என்ன விவகாரம்?

சீனா - அமெரிக்கா இடையே திடீரென்று நடைபெற்ற பேச்சுவார்த்தை! - என்ன விவகாரம்?

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பு ஏற்றதையடுத்து முதல் முறையாக சீனா, அமெரிக்க நாடுகளுக்கிடையே ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பு ஏற்றதையடுத்து நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு துணை இயக்குனர் ஹுவாங் எக்ஸ்யுஇபிங், அமெரிக்கா ராணுவ துணை இயக்குனர் மைக்கேல் சேஸுடன், கடந்த வாரம் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து ஹாங் காங் செளத் சீனா மார்னிங் போஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஆப்கன் பிரச்னை உடனடியாக ஆலோசனைக்கு உட்படுத்த வேண்டிய விவகாரங்களில் ஒன்று. அலாஸ்கா பேச்சுவார்த்தையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இப்பிரச்னை குறித்து எழுப்பினார். ஆனால், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இது குறித்து விவாதிக்க மறுத்துவிட்டார்" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, அலாஸ்காவில் மார்ச் மாதம் அமெரிக்கா, சீனா நாடுகளுக்கிடையே உயர் மட்ட அலுவலர்கள் ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad