dubai-cat-rescue-heroes-receive-rs-10-lakh-each-for-their-act-of-kindness அடித்தது ஜாக்பாட்: பூனையை காப்பாற்றியவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

dubai-cat-rescue-heroes-receive-rs-10-lakh-each-for-their-act-of-kindness அடித்தது ஜாக்பாட்: பூனையை காப்பாற்றியவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு!

அடித்தது ஜாக்பாட்: பூனையை காப்பாற்றியவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு!

ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாயில், மாடியில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பூனையை காப்பாற்றியவர்களுக்கு 10 லட்சம் ரூபாயை, அந்நாட்டு துணை அதிபர் ஷேக் முகமது வழங்கி பாராட்டி உள்ளார்.

துபாயின் டெய்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தவர் அந்த குடியிருப்பில் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலானோர் வீடுகளில் செல்லப்பிராணியாக பூனை வளர்க்கப்படுகிறது. இந்நிலையில், அங்குள்ள இரண்டாவது மாடியில் நடந்து கொண்டிருந்த பூனை திடீரென தவறி கீழே விழுந்தது

இதனை கண்ட அங்கு வசிக்கும் நசீர் முகமது என்பவர், அந்த பூனையை காப்பாற்ற முயன்றார். அங்கிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேரை சேர்த்து கொண்டு அந்த பூனையை காப்பாற்றினார். தன்னிடம் இருந்த துணியை வலைப்போல் விரித்து அந்த பூனையை நசீர் காப்பாற்றினார்.இதை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர்.

இதனை கண்ட அந்நாட்டின் துணை அதிபர் ஷேக் முகமது, கர்ப்பிணி பூனையை காப்பாற்றிய நான்கு பேரை பாராட்டி உள்ளார். மேலும், தனது உதவியாளர் மூலம் ஆளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad