'ரிவால்வர் ரீட்டாவை' வெயிட்டிங் லிஸ்டில் வைத்த காவல்துறை..! வைரல் வீடியோ - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

'ரிவால்வர் ரீட்டாவை' வெயிட்டிங் லிஸ்டில் வைத்த காவல்துறை..! வைரல் வீடியோ

'ரிவால்வர் ரீட்டாவை' வெயிட்டிங் லிஸ்டில் வைத்த காவல்துறை..! வைரல் வீடியோ

வியூஸ், லைக்ஸ் மோகம் யாரைத்தான் விட்டு வைத்துள்ளது என்பதற்கு பல சம்பவங்கள் சாட்சியாகியிருக்கும் நிலையில் தற்போது பெண் போலீஸ் ஒருவர் அந்த வரிசையில் இடம்பெற்று வேலைக்கு உலை வைத்துக்கொண்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் எம்எம் கேட் பகுதி காவல் நிலையத்தில் கான்ஸ்டேபிளாக பணியாற்றி வருகிறார் பிரியங்கா மிஸ்ரா. இவர் கடந்த 21ம் தேதி சீருடையில் இருந்தவாறு ரிவால்வரை வைத்துக்கொண்டு ‘ரங்க்பாஸி’ பற்றிய வசனத்துக்கு வாயசைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதனை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததால் வைரலாகி கடுமையான விமர்சனங்களையும் பெற்றது. இந்த விவகாரம் சூடாகி ஆக்ரா காவல்துறையின் கவனம் பெற்றதையடுத்து ஆக்ராவின் காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) விசாரணைக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பிரியங்கா மிஸ்ரா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். 37 வினாடி ஓடும் அந்த வீடியோவில், ''உ.பி.யில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் துப்பாக்கிகளுடன் விளையாடத் தெரியும்." என்ற வசனத்திற்கு பிரியங்கா மிஸ்ரா வாயசைத்ததுடன், அவருக்கு வழங்கப்படாத ரிவால்வரை கொண்டு வீடியோ வெளியிட்டத ு விதிமீறலை வெளிக்காட்டியுள்ளது. கடும் விமர்சனங்களுக்கு பின்னர் அவருடைய அந்த வீடியோ இன்ஸ்ட்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad