மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி - பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி - பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி - பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து, ஒரு மாதத்திற்கு ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என, பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் கேடிலாவின் நிர்வாக இயக்குனர் ஷர்வில் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து, சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஒரு சில தனியார் மருத்துவமனைகளில், ரஷ்யாவின், ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியும் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று, பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் கேடிலா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை, இந்தியாவில் அவசரத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த இந்திய மருந்து மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சைடஸ் கேடிலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்வில் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் அக்டோபர் மாதம் முதல், மாதத்திற்கு ஒரு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான உற்பத்தித்திறன் எங்களிடம் உள்ளது. 12 - 17 வயது சிறுவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்த எங்களது சைடஸ் கேடிலா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் - ஜனவரி மாதத்திற்குள் 3 முதல் 5 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை நிறைவேற்ற முடியவில்லை.
தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டு கூட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தயாரிப்பது குறித்து மற்ற நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தயாரிக்க இருக்கிறோம். புதிய தொழில்நுட்பம், விநியோக சங்கிலி ஆகியவற்றை கணிக்கில் கொண்டு தடுப்பூசியின் விலை நிர்ணயிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad