ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு; திருப்பதியில் இன்றே கடைசி!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் கொரோனாவிற்கு பிறகான தரிசனத்தில்
பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஏழுமலையான் பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். தினசரி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக காணிக்கை
வசூலாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருமலையில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மட்டும் விற்கப்பட்டு வருகிறது.
பவித்ர உற்சவ விழா
வரும் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் டிக்கெட்கள் இன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நடைபெறும்பவித்ர உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தினந்தோறும் நடைபெறும் பூஜைகளில் அர்ச்சகர்கள், பக்தர்கள், ஊழியர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரம் செய்யப்படும்.
No comments:
Post a Comment