மாநில அரசுகள் கையில் அதிகாரம்; ஓபிசி விஷயத்தில் மகத்தான வெற்றி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

மாநில அரசுகள் கையில் அதிகாரம்; ஓபிசி விஷயத்தில் மகத்தான வெற்றி!

மாநில அரசுகள் கையில் அதிகாரம்; ஓபிசி விஷயத்தில் மகத்தான வெற்றி!

இந்திய அரசியலைப்பு சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16ன் கீழ் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொதுப் பிரிவினருக்கு (OC) 31 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 26.5 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு (BCM) 3.5 சதவீத உள் இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20 சதவீதமும், பட்டியல் சமூகத்தினருக்கு (SC) 15 சதவீதமும், பட்டியல் சமூக அருந்ததியினருக்கு (SCA) 3 சதவீத உள் இடஒதுக்கீடும், பழங்குடியினருக்கு (ST) 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம்

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் சமூகத்தில் பின்தங்கிய மக்கள் பலர் பயனடைந்து வாழ்க்கையில் ஏற்றம் கண்டு வருகின்றனர். இதில் ஓபிசிக்கான இடஒதுக்கீடு ஆனது திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொடர்ந்து திருத்தப்பட்டு 69 சதவீதத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது

ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்

இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தில் ஓபிசி பிரிவில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க உரிய திருத்தங்கள் செய்யப்பட்டன. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஓபிசி பட்டியலை மாநில அரசுகள் மாற்றியமைக்க சட்டத்தில் இடமில்லை. எனவே மராத்தா இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அதிர்ச்சியூட்டும் தீர்ப்பை அளித்திருந்தது. மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்த போதும், உச்ச நீதிமன்றம் கேட்கவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad