இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்; ஷாக் கொடுத்த அரசு!
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் நான்காவது அலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மிக வேகமாகவும், தீவிரமாகவும் டெல்டா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. தினசரி தொற்று 3 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகின்றது. நேற்று ஒரேநாளில் 3,4,35 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 160 பேர் பலியாகி இருக்கின்றனர்.
முழு ஊரடங்கு
இதையொட்டி நாடு தழுவிய அளவில் 4
வாரங்களுக்கு முழு ஊரடங்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதன்மூலம் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று இலங்கை அரசுக்கு மருத்துவர்கள் சங்கப் பேரவை வலியுறுத்தியிருந்தது. இதுதொடர்பாக கொரோனா தடுப்பின் தேசிய செயல்பாட்டுக் குழுவினர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இரவுநேர கட்டுப்பாடுகள் அமல்
இதையடுத்து ராணுவத் தளபதியும், கொரொனா தடுப்பின் செயல்பாட்டுக் குழுத் தலைவருமான சவேந்திர சில்வா முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, இன்று (ஆகஸ்ட் 16) முதல் இலங்கையில் இரவுநேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. இது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். மேலும் அனைத்து பொது நிகழ்ச்சிகள் நடத்தவும்,
மக்கள் ஒன்று கூடவும் தடை விதிக்கப்படுகிறது.
திருமண நிகழ்வுகளுக்கு தடை
நாளை முதல் வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை. முன்னதாக திருமண நிகழ்வுகளுக்கு கலந்து கொள்ளும் விருந்தினர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது முழுதுமாக தடை விதிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment