நாடு முழுவதும் உடனே லாக்டவுன்; மருத்துவர்கள் சங்கம் பரபரப்பு கோரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

நாடு முழுவதும் உடனே லாக்டவுன்; மருத்துவர்கள் சங்கம் பரபரப்பு கோரிக்கை!

நாடு முழுவதும் உடனே லாக்டவுன்; மருத்துவர்கள் சங்கம் பரபரப்பு கோரிக்கை!


இலங்கையில் கொரோனா வைரஸின் முதல் அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் பாதிப்புகள் பதிவாகி வந்தன. இரண்டாவது அலை நடப்பாண்டின் பிப்ரவரியிலும், மூன்றாவது அலை மே மாதத்திலும் புதிய உச்சம் தொட்டன. இந்நிலையில் ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து கொரோனா நான்காம் அலையை இலங்கை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம், மூன்றாயிரம் என்ற எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. நேற்று புதிதாக 3,152 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 வாரங்கள் தடை

கடந்த 7 நாட்களின் கொரோனா பாதிப்பு சராசரி 3,435ஆக காணப்படுகிறது. இந்த சூழலில் அதிபர் கோத்தபய ராஜபக்ச தலைமையில் கோவிட் ஒழிப்பு செயலணியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை

ராணுவத் தளபதி, மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்படுவதாக அறிவித்தார்.

அடையாள அட்டை கட்டாயம்

அதேசமயம் அத்தியாவசியப் பணிகளுக்கு எந்தவொரு தடையும் இல்லை. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பொது இடங்களில் நடமாடும் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதற்கான அடையாள அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும். தற்போதைய நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகள் வரும் நாட்களில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad