தங்கத்தை மாரியப்பன் தங்கவேலு தவற விட என்ன காரணம்: குவியும் பாராட்டு!
பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் உள்பட 3 வீரர்கள் பங்கேற்றனர். தொடக்கம் முதலே அமெரிக்க வீரர் சாம் க்ரேவிற்கும், மாரியப்பன் தங்கவேலுவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.
போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட்ட போதும், அமெரிக்க
வீரருக்கு கடும் சவாலாக இருந்த மாரியப்பன் தங்கவேலு, நூலிழையில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். அமெரிக்க வீரர் 1.88 மீ. உயரம் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், 1.83 மீட்டர் உயரம் தாண்டி இந்திய வீரர் ஷரத் குமார் வென்கலப் பதக்கமும் வென்றனர்.
வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பக்கத்தில், “மாரியப்பனின் செயலால் இந்தியா பெருமை கொள்கிறது. சிறப்பான திறமையை மாரியப்பன் தங்கவேலு தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், ஷரத் குமாருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
“டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியா தொடர் வெற்றிகளைக் குவித்துவருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக உயரம் தாண்டுதலில் பாராலிம்பிக் பதக்கம் வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேலு,
உயரம் தாண்டுதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றுள்ள சரத்குமார் மற்றும் சிங்ராஜ் அதானா ஆகிய மூவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment