காலையிலேயே சரக்கடிக்கும் கிராமம்: இதுதான் காரணம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

காலையிலேயே சரக்கடிக்கும் கிராமம்: இதுதான் காரணம்!

 காலையிலேயே சரக்கடிக்கும் கிராமம்: இதுதான் காரணம்!

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்படா விட்டாலும், டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் போட்டு முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும், அதனை களைந்து பொதுமக்களுக்கு விரைவாக தடுப்பூசி போட மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் ஆர்வமாக பொதுமக்கள் தடுப்பூசி போட்டு வந்தாலும், ஒரு சிலர் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர்.

எனவே, தடுப்பூசியின் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசும், கர்நாடக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், கொரோனா தடுப்பூசிக்கு பயந்து அம்மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மக்கள் மது அருந்தி வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் ஒனகெரே கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போட சுகாதாரத் துறையினர், ஆஷா திட்ட ஊழியர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால், அக்கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் காலையிலேயே மது அருந்தி விடுகின்றனர். மது அருந்தியிருந்தால் தடுப்பூசி போட்ட மாட்டார்கள் என்பதால் இந்த நூதன திட்டத்தை அவர்கள் தீட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad