துப்பாக்கியால் சுட்டு மத்திய அமைச்சருக்கு வரவேற்பு - 3 போலீசார் சஸ்பெண்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

துப்பாக்கியால் சுட்டு மத்திய அமைச்சருக்கு வரவேற்பு - 3 போலீசார் சஸ்பெண்ட்!

துப்பாக்கியால் சுட்டு மத்திய அமைச்சருக்கு வரவேற்பு - 3 போலீசார் சஸ்பெண்ட்!

கர்நாடக மாநிலத்தில், மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை இணை அமைச்சர் பகவந்த் கூபாவுக்கு, துப்பாக்கியால் சுட்டு வரவேற்பு அளிக்கப்பட்ட விவகாரத்தில், 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் யாதகிரி மக்களைச் சந்திப்பதற்காக, மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள பா.ஜ.க.,வினர், மத்திய அமைச்சருக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் என்று நினைத்து, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பான நிகழ்வுகளை, அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில் நிகழ்ந்த இந்த வரவேற்புக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பாபுராவ் சின்சனூர் உள்ளிட்ட 4 பேர் மீது கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்ததாக, மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad