பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு; முதல்வர் சொன்ன முக்கியத் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு; முதல்வர் சொன்ன முக்கியத் தகவல்!

பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு; முதல்வர் சொன்ன முக்கியத் தகவல்!

கர்நாடகாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்பிறகு தனது முடிவில் மாற்றம் செய்து, கொரோனா பாசிடிவ் விகிதம் 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் நாளை (ஆகஸ்ட் 23) முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

சமாதானப்படுத்தும் முதல்வர்

பள்ளிகளை பொறுத்தவரை 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் உடல்நலம் குறித்து சில பெற்றோர்களும், ஆசிரியர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர். இவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, வகுப்பறைகளில் பாதுகாப்பான கற்றலை உறுதிப்படுத்தும் வகையில் அதீத முக்கியத்துவம் அளித்து மாநில அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஏற்பாடுகள் தயார்

பள்ளிகளை திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களை எவ்வாறு பள்ளிகளுக்கு வரவழைப்பது, பெற்றோர்கள்/ பாதுகாவலர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்று வருவது, வகுப்பறைகளில் இருக்கைகளை உரிய முறையில் ஏற்பாடு செய்தல், சுழற்சி முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது,

படிப்படியாக அழைப்பு

வகுப்பறைகளை தூய்மையாக வைத்திருப்பது உள்ளிட்டவை தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் வழிகாட்டுதல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும் பெற்றோர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தங்கள் பிள்ளைகளின் உடல்நலனில் மிகுந்த நம்பிக்கை வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad