இந்திய குழந்தைகளுக்கு பெரிய ஆபத்து; எப்படித் தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

இந்திய குழந்தைகளுக்கு பெரிய ஆபத்து; எப்படித் தெரியுமா?

இந்திய குழந்தைகளுக்கு பெரிய ஆபத்து; எப்படித் தெரியுமா?

சர்வதேச அளவில் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது பருவநிலை மாற்றம். இதன் விளைவுகள் பெரியவர்களை மட்டுமின்றி பெண்கள், குழந்தைகளையும் சமூக, பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பிற்கு ஆளாக்குகிறது. அதாவது உடல்நலம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பாதிக்கப்படுகின்றன.

பருவநிலை மாற்றம்

இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால் அதிக பாதிப்பிற்கு ஆளாகும் 33 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனம் முதல்முறை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த நாடுகளில் தொடர்ச்சியான வெள்ளம், புயல், வெப்பக் காற்று, காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படக்கூடும். இது குழந்தைகள் மற்றும் பெண்களை சமூக-பொருளாதார ரீதியான பாதிப்பிற்கு உட்படுத்துகின்றன.இந்தியாவிற்கு ஆபத்து

இந்த பட்டியலில் இந்தியா 26வது இடத்தில் இருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் சுமார் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திப்பர். நகர்ப்புற பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் காற்று மாசுபாடு அதிகமுள்ள 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad