முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார்!

முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார்!

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 89.

பா.ஜ.க.,வைச் சேர்ந்த கல்யாண் சிங், வயத ு மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி முதல், டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்றிரவு, உடல் நலக் குறைவு காரணமாக, கல்யாண் சிங் காலமானார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக, 1991 - 1992ம் ஆண்டு வரை கல்யாண் சிங் பணியாற்றி உள்ளார். மேலும், 2009 முதல் 2014ம் ஆண்டு வரை, உத்தர பிரதேச மாநிலத்தின் இடா மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்து உள்ளார். இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

கல்யாண் சிங் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad