இலக்கை நிர்ணயித்த சோனியா காந்தி: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முழக்கம்!
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை கைபற்றியது. அதேசமயம், பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசலும் ஒரு காரணமாக
கூறப்படுகிறது.
இதனை சரிசெய்ய அக்கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், வருகிற 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் எப்படியும் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றி விட வேண்டும் என்றும் அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியால் மட்டுமே அது சாத்தியமல்ல என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இதற்காக, நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் தேசிய, மாநிலக்
கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க அக்கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவருக்கு காங்கிரஸில் கட்சியிலேயே முக்கியப் பதவி வழங்கப்படுமா அல்லது எதிர்க்கட்சிகளை காங்கிரசுடன் ஒன்றிணைத்து அதற்கான பணிகளை அவர் மேற்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment