புதிய வழிகாட்டு நெறிமுறைகள்; அதிரடி காட்டிய தமிழக அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்; அதிரடி காட்டிய தமிழக அரசு!

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்; அதிரடி காட்டிய தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த ஜூன் 24ஆம் தேதி தினசரி தொற்று 1,819ஆக இருந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 24) 1,585 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையை பொறுத்தவரை அதே 27 என்ற எண்ணிக்கை தொடர்கிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மாநிலம் முழுவதுமுள்ள அங்கன்வாடி மையங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,

சுத்தமாக வைத்திருப்பது அவசியம்

* அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி மையத்திற்குள் நுழையும் போது கைகளை சோப்பு கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் கட்டாயம்

முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மையத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். வளாகங்கள், சமையல் அறை உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்திய பின் பயன்படுத்த வேண்டும்.

மதிய உணவு தயார் செய்தல்

* இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகளை நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்துவதோடு, தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்களை பயன்படுத்தக் கூடாது. விரல் நகங்களில் நகப்பூச்சு மற்றும் செயற்கை நகங்கள் ஏதும் பயன்படுத்தக் கூடாது. மூக்கு சொறிதல், தலை கோதுதல், கண்கள், காது மற்றும் வாயினை தேய்த்தல், வளாகத்தில் எச்சில் துப்புதல் மற்றும் மூக்கு சிந்துதல் ஆகிய பழக்கங்களை முன் உணர்வோடு அங்கன்வாடி பணியாளர்கள் தவிர்க்க வேண்டும். அப்படி ஏதேனும் தன்னிச்சையாக செய்தாலும் உடனடியாக சோப்பு கொண்டு கைகழுவுதல் வேண்டும்.

* அங்கன்வாடி மையத்தின் அருகில் குப்பைகள், கழிவுநீர், சுற்றித் திரியும் விலங்குகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றாம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் 2 வயது முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வாரத்தில் 6 நாட்கள் மையத்திலேயே சூடான, சமைத்த மதிய உணவு காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வழங்கப்பட வேண்டும். அதற்கு முன்னதாக ஊழியர்கள் உணவைத் தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.



அறிகுறிகள் தென்பட்டால்

* முட்டை வழங்கப்படும் நாட்களில் வேகவைத்த முட்டையினை மையத்திலேயே குழந்தைகள் உட்கொள்ள செய்திட வேண்டும். முட்டைகளை பயனாளிகளின் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. குழந்தைகள் உணவு உண்ண அமரும் போது தகுந்த சமூக இடைவெளியுடன் அமர்வதை பணியாளர்கள் உறுதி செய்வதோடு, வழங்கப்படும் குடிநீரை காய்ச்சி வடிகட்டிய பின்னரே வழங்க வேண்டும்.

* 2 வயது முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. குழந்தைகள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அங்கன்வாடி மையத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad