தகுதி இல்லாதவர்களுக்கு ரேஷன் அட்டையா? இனி யாரும் தப்ப முடியாதாம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

தகுதி இல்லாதவர்களுக்கு ரேஷன் அட்டையா? இனி யாரும் தப்ப முடியாதாம்!

தகுதி இல்லாதவர்களுக்கு ரேஷன் அட்டையா? இனி யாரும் தப்ப முடியாதாம்!

சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதில் உணவுத்துறை மானியக்கோரிக்கை கொள்ளை விளக்க குறிப்பை அமைச்சர் ஆர்.சக்கரபாணி பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், “முழுக் கணினிமயமாக்கல் திட்டத்தின் கீழ் மாநில பொது விநியோகத்திட்டம் முழுவதும் கணினிமயமக்கப்பட்டு நியாயவிலை கடைகளின் அனைத்து பரிவர்த்தனைகளும் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகிறது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அன்னபூர்ணா திட்டதில் தமிழகத்தில் வசித்து வரும் 8491 பயனாளிகள் மற்றும் 4,01,445 முதியோர் உதவி தொகை பெறுவோருக்கு அரசினால் பொது விநியோக திட்டத்தின் கீழ் மாதமொன்றிற்கு முறையே 10 கிலோ மற்றும் 5 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முழு கணினிமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஆதார் எண் பதியப்பட்ட தரவு தொகுப்பு வாயிலாக தகுதியற்ற குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டதுடன் தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad