சட்டமன்றத்தில் செம சர்ப்ரைஸ் கொடுத்த செங்கோட்டையன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 27, 2021

சட்டமன்றத்தில் செம சர்ப்ரைஸ் கொடுத்த செங்கோட்டையன்!

சட்டமன்றத்தில் செம சர்ப்ரைஸ் கொடுத்த செங்கோட்டையன்!

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்றைய தினம் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏவுமான கே.செங்கோட்டையன், காமராஜர் அனைத்து கிராமங்களிலும் பள்ளிகளை தொடங்கினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சரித்திரம் படைத்தார். அவருக்கு பின் வந்த ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். ஒவ்வொரு தலைவர்களுக்கும் இங்கே தனித்தனி வரலாறு இருக்கிறது.

இது திராவிட மண்

திராவிடம் என்று சொன்னாலே 1967ஆம் ஆண்டிற்கு பின்னர் திராவிட மண் தான் தமிழ்நாட்டில் ஆள முடியுமே தவிர, வேறு எவராலும் ஆள முடியாது என்ற வரலாற்றை படைத்தவர் தந்தை பெரியார். அவர் வழியில் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி நடந்தார்கள். எனவே தான்

திராவிட இயக்கம் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல திட்டத்தை அறிவித்துள்ளார். Vஅதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இடஒதுக்கீடு அரசியல்

கிராமங்களில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருந்த போது இந்தியாவே வியக்கத்தக்க அளவில் 7.5 சதவீத இடஒதுக்கீடு தந்து அடித்தட்டு மக்களும் மருத்துவராகலாம் என்ற வரலாற்றை படைத்தார். அதேபோன்று தற்போது பொறியியல், மருத்துவம், வேளாண்மை, மீன்துறை போன்ற பல்வேறு துறைகளில் இந்த சட்ட முன்வடிவு முன்மொழியப்பட்டுள்ளது.

தமிழக மண்ணில் எடுபடாது

இது அடித்தட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகால அரசியலில் அதிமுக, திமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்துள்ளன. இவற்றுடன் கூட்டணி வைத்தே தேசிய கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. இந்த சூழலில் புதிதாக 4 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ள

பாஜக, அடுத்து வரும் தேர்தலில் பலம்பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும் எண்ணத்தில் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad