அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பிடிஆர் எச்சரிக்கை!
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர் ஆகிய இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி
குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குதித்து அங்கு சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்த நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், கட்டிடம் கட்டியதில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளார்களை சந்தித்த நிதியமைச்சர்
பழனிவேல் தியாகராஜன், “முன்னாள் அமைச்சர்களுக்கு தெரியாமல் தவறு நடந்தாலும், ஜனநாயக முறைப்படி அவர்களே பொறுப்பு. எங்கெல்லாம் தவறு நடந்து உள்ளதோ, அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
No comments:
Post a Comment