கொடநாடு விசாரணை தவறில்லை: சரத்குமார் பரபரப்பு!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இதையடுத்து, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் சில தினங்களுக்கு
முன்னர் ரகசிய விசாரணை நடத்தினர். அதன் மீதான விசாரணையை அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை திட்டமிட்டு சேர்க்க சதி நடப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், இது அரசியல்
நோக்கத்திலான விசாரணைகள் அல்ல; உண்மை குற்றவாளிகளை கண்டறியும் விசாரணை என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையிலேயே விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கொடநாடு விவகாரத்தில் விசாரணை நடத்துவதில் தவறு ஏதும் இல்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment