அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட சூப்பர் நியூஸ்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. பள்ளிகளைப் பொறுத்தவரை 9-12 வகுப்பு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வகுப்புகளில் 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதித்து,
சுழற்சி முறையில் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதிகளிலும், ஆய்வகங்களிலும் போதிய சரீர இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகள் தொடக்கம்
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகக் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு சேர்க்கை தொடர்பாக அனைத்து இறுதியாண்டு மாணவர்களும் ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் பேசுகையில், CEG (கிண்டி),
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (AC Tech), MIT,
கொரோனா சிகிச்சை
மையம்
குரோம்பேட்டை ஆகிய கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செய்முறை மற்றும் ஆய்வக வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில், CEG மற்றும் MIT கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பிற நகரங்கள் அல்லது மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். விடுதியை பொறுத்தவரை ஒரு அறைக்கு 3 அல்லது 4 பேர் வீதம் பயன்படுத்தி வருகின்றனர். AC Tech கல்லூரி விடுதியானது தற்போது வரை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று கொண்டிருக்கின்றனர்.
விடுதி மாணவர்கள் வருகை
எனவே அனைத்து விடுதி மாணவர்களையும் ஒரே நேரத்தில் அனுமதிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. தியரி வகுப்புகளைப் பொறுத்தவரை இன்னும் சில நாட்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும் என்று குறிப்பிட்டார். கிண்டியில் உள்ள CEG-ன் 15 விடுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், குரோம்பேட்டையில் உள்ள MIT-ன் 10 விடுதிகளில் சுமார் 1,500 மாணவர்கள் பயின்று வருவது கவனிக்கத்தக்கது.
இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறுகையில், AC Tech கல்லூரி விடுதியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை வேறு
இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரின் ஆரோக்கியத்திலும் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். படிப்படியாக அனைத்து மாணவர்களையும் வளாகத்திற்குள் வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment