சிவசங்கர் வழக்கில் அதிரடி மாற்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

சிவசங்கர் வழக்கில் அதிரடி மாற்றம்!

சிவசங்கர் வழக்கில் அதிரடி மாற்றம்!



சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ‘சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் சிலரும் இதற்கு உடந்தை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் சிக்கியுள்ளன.

புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது இதுவரை மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், இரண்டில் அவர் சிறைத்தண்டனையை பெற்று வருகிறார். சிவசங்கர் தவிர, இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பெண் ஆசிரியைகளும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில்   சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் திரட்ட சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதற்கிடையே, ஜாமீன் வழங்கக் கோரி சிவசங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி டி.எஸ்.பி. குணவர்மன், சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புத்துறைத் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குணவர்மன் தலைமையிலான தனிப்படை பிரிவினர்தான் தலைமறைவாக இருந்த சிவசங்கரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad