மனைவியை 8 முறை கர்ப்பமாக்கி 8 முறை கருக்கலைப்பு, 1500 ஹார்மோன் ஊசிகள்..! வெறி பிடித்த கணவன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

மனைவியை 8 முறை கர்ப்பமாக்கி 8 முறை கருக்கலைப்பு, 1500 ஹார்மோன் ஊசிகள்..! வெறி பிடித்த கணவன்

மனைவியை 8 முறை கர்ப்பமாக்கி 8 முறை கருக்கலைப்பு, 1500 ஹார்மோன் ஊசிகள்..! வெறி பிடித்த கணவன்


மும்பையைச் சேர்ந்த 40 வயது பெண் தனது கணவர் மற்றும் மாமனார் மீது கொடுத்துள்ள வன்கொடுமை புகார் போலீசாரையே அதிர வைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த அந்த பெண் ஓய்வு பெற்ற நீதிபதியின் மகள் ஆவார். இவர் கடந்த 2007 இல் ஒரு வழக்கறிஞரை திருமணம் செய்து கொண்டார். அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள், மற்றும் அவரது மைத்துனர் ஒரு மருத்துவர். இந்த நிலையில், ஆண் குழந்தை ஒன்று பெற்றுக்கொள்ள வேண்டும் என அந்த கணவர் மனைவியை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், 2009 இல், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் 2011 இல், மீண்டும் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த முறை கருவில் இருப்பது பெண் குழந்தைதான் என்று சட்ட விரோதமாக தெரிந்து கொண்டதுடன் மனைவியின் ஒப்புதல் இல்லாமல் அந்த கருவையும் கலைத்துள்ளனர்.

மேலும்,இந்தியாவில் தடை செய்யப்பட்ட மரபணு சிகிச்சைகளை மேற்கொள்ள மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றவர், பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிக்க மருத்துவ நடைமுறைகளுக்கும் மனைவியை உட்படுத்தியுள்ளார். அதற்காக, 1,500 க்கும் மேற்பட்ட ஹார்மோன் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் அந்த பெண்ணின் உடலில் போடப்பட்டுள்ளன.ஆண் குழந்தைக்காக மனைவியை 8 முறை கர்ப்பமாக்கி 8 முறை கரு கலைப்பும் செய்த கணவர் மீது பாதிக்கப்பட்ட பெண் தாதர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். அதன்படி, வரதட்சணை கொடுமை, சட்ட விரோதமாக குழந்தை பாலினம் தெரிந்துகொண்டது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad