இங்க சரிப்பட்டு வராது; டெல்லிக்கு வண்டியை திருப்பிய ராஜேந்திர பாலாஜி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

இங்க சரிப்பட்டு வராது; டெல்லிக்கு வண்டியை திருப்பிய ராஜேந்திர பாலாஜி!

இங்க சரிப்பட்டு வராது; டெல்லிக்கு வண்டியை திருப்பிய ராஜேந்திர பாலாஜி!



உயர் நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. அதாவது, நீதிபதி சத்திய நாராயணன் அளித்த தீர்ப்பில், ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மாறுபட்ட தீர்ப்புகள்

இதையடுத்து நீதிபதி ஹேமலதா வாசித்த தீர்ப்பில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது இறந்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும். எனவே மேற்கொண்டு விசாரிப்பதால் எந்தவித பலனும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.இவர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல் கான், இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா,

ண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள்

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவர்கள், காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்து வழக்கு விசாரணையை இன்று (ஆகஸ்ட் 19) ஒத்திவைத்தார்.இந்நிலையில் சொத்துக் குவிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விதிமுறைகளை பின்பற்றாமல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad