டிக்-டாக் சூர்யாதேவி யூ-டியூப்பில் செஞ்ச காரியம்; போலீசார் பயங்கர ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

டிக்-டாக் சூர்யாதேவி யூ-டியூப்பில் செஞ்ச காரியம்; போலீசார் பயங்கர ஷாக்!

டிக்-டாக் சூர்யாதேவி யூ-டியூப்பில் செஞ்ச காரியம்; போலீசார் பயங்கர ஷாக்!


தனது யூ-டியூப் சேனலில் போலீசாருக்கு சவால் விடும் வகையில் சூர்யாதேவி பேசியதால் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
டிக்-டாக் பிரபலங்கள் பலரும் யூ-டியூபில் சேனல் தொடங்கி பரபரப்பான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த பிரபலங்களுக்கு மத்தியில் திடீர், திடீரென சண்டை ஏற்பட்டு வருகிறது. இந்த விஷயங்கள் நெட்டிசன்களுக்கு தீனி போட்டு தினசரி தலைப்பு செய்திகளாக மாறிவிடுகின்றன. அந்த வகையில் சூர்யாதேவி, சிக்கா இடையிலான மோதல் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது. மதுரையை சேர்ந்த யூ-டியூப்பர் சிக்கா என்கிற சிக்கந்தர், தனது வீட்டின் அருகே கடந்த 2ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இருதரப்பும் பயங்கர மோதல்

அப்போது அந்த வழியாக வந்த டிக்-டாக் பிரபலம் சூர்யாதேவி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொண்டு சிக்கந்தரை செருப்பால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மேலும் அந்த வீடியோவை தனது யூ-டியூப் பக்கத்திலேயே பதிவிட்டு சூர்யாதேவி விளம்பரம் தேடிக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக சிக்கந்தரும், சூர்யாதேவியும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.போலீசில் புகார்

இந்நிலையில் சூர்யாதேவி தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் சிக்கந்தர் புகார் தெரிவித்தார். இதையொட்டி சூர்யாதேவி மற்றும் அவரது ஆண் நண்பர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஒருவாரத்திற்கும் மேலாகியும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
சசிகலா வீடியோ- எனது பிறந்த நாளில் இதை செய்யுங்கள் !சூர்யாதேவி சிக்குவாரா?

இந்நிலையில் மீரா மிதுன் ஸ்டைலின் சூர்யாதேவி வீடியோ ஒன்றை தனது யூ-டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”நான் பார்க்காத போலீசா, வழக்கா? என் வீட்டிற்கு எந்த போலீஸ் வருகிறது என்று பார்க்கிறேன்” என்று மதுரை போலீசாருக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார். ஏற்கனவே தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சைக்கு ஆளானார் மீரா மிதுன்.இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசாருக்கு சவால்விடும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதன்பிறகு பெங்களூருவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை அதிரடியாக கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அப்போது கெஞ்சி கூத்தாடி கதறும் வகையில் மீரா மிதுன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதேபோல் சூர்யாதேவியும் சிக்குவாரா என்று கேள்வியை பலரும் முன்வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad