தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையம்: தமிழக அரசு புதிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையம்: தமிழக அரசு புதிய உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையம்: தமிழக அரசு புதிய உத்தரவு!


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இதனால் அப்பாவி மக்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அப்போதைய தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக ஆணையம் பல்வேறு நபர்களை விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களின் உறவினர்கள், காவலர்கள், உயர் அதிகாரிகள், நடிகர் ரஜினிகாந்த் என பல தரப்பினரிடம் விசாரணை நடைபெற்றது. துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்திலும் அருணா ஜெகதீசன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சி மாறிய போதும் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மே மாதம் புதிதாகப் பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதுவரை 28 கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் 813 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வரை ஆறு மாதம் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad