இவங்களுக்கெல்லாம் 100% தடுப்பூசி போட்டுட்டாங்களாம்... அமைச்சர் பெருமிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

இவங்களுக்கெல்லாம் 100% தடுப்பூசி போட்டுட்டாங்களாம்... அமைச்சர் பெருமிதம்!

இவங்களுக்கெல்லாம் 100% தடுப்பூசி போட்டுட்டாங்களாம்... அமைச்சர் பெருமிதம்!



அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் குடலிறக்க சிகிச்சை முறையை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் விரைவில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செுலுத்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 60 கிரமங்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.'மாநில அரசுகளுக்கு 75% லிருந்து 90 % தடுப்பூசிகளையும், தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதத்திலிருந்து குறைத்து 10% தடுப்பூசிகளையும் வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.

அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை சி.எஸ்.ஆர். நிதியுதவி மூலம் இரண்டாம் தவணைகளாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad