விஜய் அண்ணாதான் இதுகெல்லாம் முடிவு கட்டணும்... திருச்சி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கண்ணீர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

விஜய் அண்ணாதான் இதுகெல்லாம் முடிவு கட்டணும்... திருச்சி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கண்ணீர்!

விஜய் அண்ணாதான் இதுகெல்லாம் முடிவு கட்டணும்... திருச்சி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கண்ணீர்!


விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தங்களை திட்டமிட்டு புறக்கணிப்பதாக, திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள், பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தொட்டியம் பகுதி முன்னாள் விஜய் ரசிகர் மன்ற செயலாளர் பாரதிராஜா கூறியது:

கடந்த பல ஆண்டுகளாக திருச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைமை நிர்வாகிகளாகவும், ஒன்றிய, நகர பகுதிகளின் மன்ற நிர்வாகிகளும் செயல்பட்டு வந்தோம்.

தற்போது தங்களை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பெயரில் ரசிகனாக, கிளை இயக்க பதிவெண் கொண்டு நலத்திட்ட பணிகளை செய்யக்கூடாது எனவும், தொடர்ந்து நலத்திட்ட பணிகள் செய்வதால் புஸ்ஸி ஆனந்த் தங்களை மிரட்டி வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக விஜய் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாததற்கு காரணம் விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான். மூத்த நிர்வாகிகளை எந்தவொரு நலதிட்டத்தை செய்ய விடாமல் இவர் தடுத்து வருகிறார்.


தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் இது தொடர்பான பிரச்சனை நிலவி வருகிறது. கடைக்கோடியில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் ரசிகர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.விஜய் பெயரை பயன்படுத்தக்கூடாது என பலர் மிரட்டப்பட்டு வருகின்றனர். செய்தியாளர்களை சந்திக்கும் எங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு புஸ்ஸி ஆனந்த் தான் காரணமாக இருக்க முடியும்.

பல்வேறு பிசி ஷெட்யூலில் இருக்கும் விஜய்க்கு இதுகுறித்த எதுவும் தெரியாது. எனவே இந்த செய்தியை
 பார்க்கும் விஜய் அண்ணா, இயக்கத்தில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad