திமுக ஆட்டம் குளோஸ்; தோல்வி கன்ஃபார்ம் - அதிரவைத்த செல்லூர் ராஜூ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

திமுக ஆட்டம் குளோஸ்; தோல்வி கன்ஃபார்ம் - அதிரவைத்த செல்லூர் ராஜூ!

திமுக ஆட்டம் குளோஸ்; தோல்வி கன்ஃபார்ம் - அதிரவைத்த செல்லூர் ராஜூ!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தூசு தட்டி வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி என அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்தி ஆட்டம் காட்டியது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக குற்றம்சாட்டியது. விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. ஒருபக்கம் திமுக அரசின் ரெய்டு நடவடிக்கைகளை சமாளித்துக் கொண்டே, மறுபுறம் தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தும் வேலைகளை அதிமுக முடுக்கிவிட்டுள்ளது.

கட்சி தாவும் தலைவர்கள்

இந்நிலையில் மதுரை மாநகர் வடக்கு 5ஆம் பகுதி கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
செல்லூர் கே.ராஜூ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் நாஞ்சில் மனோகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் மாற்றுக் கட்சிக்கு சென்றனர்.

அதிமுக ஆட்சி மீது களங்கம்

ஆனால் தொண்டர்கள் செல்லவில்லை. அதேபோல் ஜெயலலிதா காலத்தில் ராஜ கண்ணப்பன், திருநாவுக்கரசு ஆகியோர் வேறு கட்சிகளுக்கு சென்றனர். தற்போதும் தொண்டர்கள் நம்முடனே இருக்கின்றனர். 100 நாட்களில் திமுக அரசு எந்தவொரு சாதனையும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக ஆட்சி செய்த ஜெயலலிதா அவர்களின் ஆட்சி மீது களங்கம் கற்பிக்க முயற்சி செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad