சென்னைக்கு இன்று ஹேப்பி பர்த்டே; முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

சென்னைக்கு இன்று ஹேப்பி பர்த்டே; முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!

சென்னைக்கு இன்று ஹேப்பி பர்த்டே; முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!


தமிழகத்தின் தலைநகர், இந்தியாவின் 4வது பெரிய நகரம், உலகின் 31வது பெரிய நகரம், பாரம்பரியம் மிக்க செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், விக்டோரியா ஹால், மெமோரியல் ஹால், உயர் நீதிமன்றம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விவேகானந்தர் இல்லம் என பல்வேற ு அடையாளங்களை தாங்கி நிற்கிறது சென்னை. ஆங்கிலேயர்கள் வருகையால் உருவான கிழக்கிந்திய கம்பெனியும், நெசவுத் தொழில் மூலம் பெருக்கிய வணிகமும், இதையொட்டி தொழிலாளர்களின் வருகையும், அவர்களது கடின உழைப்பும் சென்னை நகரை உருவாக்கின.

சிங்காரச் சென்னை

சென்னப்பட்டினம், மதராசப்பட்டினம், மெட்ராஸ் என பெயர்கள் மாறி வந்த நிலையில் 1996ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி தான் ’சென்னை’ எனப் பெயர் மாற்றம் செய்தார். நவீனத்தை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்ற சென்னை மாநகர், வானுயர்ந்த கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள், மெட்ரோ ரயில்கள் உடன் பிரம்மாண்டமாக இன்று வளர்ந்து நிற்கிறது.

இன்று பிறந்த நாள்

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சென்னையின் பிறந்த நாள் ’சென்னை தினம்’ என கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 382வது பிறந்த நாளை சென்னை மாநகர் கொண்டாடுகிறது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், சென்னை தினத்தை சிறப்பான முறையில் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad