ஏமாற்றிய அதிமுக மாஜிக்கள்; படு அப்செட்டில் சசிகலா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

ஏமாற்றிய அதிமுக மாஜிக்கள்; படு அப்செட்டில் சசிகலா!

ஏமாற்றிய அதிமுக மாஜிக்கள்; படு அப்செட்டில் சசிகலா!

தமிழக அரசியலில் சசிகலாவின் ரீ-எண்ட்ரி வெறும் கனவாக போய்விடுமோ என்ற அச்சம் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் அதிமுகவை மையமாக வைத்து சசிகலா நகர்த்தும் விஷயங்கள் அனைத்தும் தொடர் பின்னடைவை சந்தித்து வருகின்றன. சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது சசிகலாவிற்கு எதிராக தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்த எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இதையொட்டி மாவட்ட வாரியாக சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அதிமுக மாவட்ட செயலாளர்கள் மும்முரமாக செயல்பட்டனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் தேனி மற்றும் சில தென் மாவட்டங்களில் சசிகலாவிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றே தெரிகிறது.
அதேசமயம் சசிகலா விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மவுனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. எடப்பாடி தரப்பை சமாளிக்க சசிகலாவை பகடைக் காயாக பயன்படுத்தி திட்டம் ஏதும் வகுத்துள்ளாரா? எடப்பாடிக்கு சசிகலாவே மேல் என்று அவரது தலைமையை ஏற்க தயாராகி விட்டாரா? என்றெல்லாம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சசிகலாவின் அரசியல் நகர்வுகள் ஆரம்பமானது.
தனது ஆதரவாளர்களுடன் பேசிய ஆடியோக்களை சசிகலா தரப்பு தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இது அதிமுக தலைமைக்கு தலைவலியாக அமைந்தாலும், மேல்மட்டத் தலைவர்கள் யாரும் சசிகலா உடன் நெருக்கம் காட்டாதது சற்று நிம்மதியை அளித்தது. இதற்கிடையில் அதிமுக பொதுச் செயலாளர் வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையில் காத்திருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad