இன்று எல்.முருகன் கொடுக்கும் பரிசு; செம குஷியில் பாஜக தலைவர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

இன்று எல்.முருகன் கொடுக்கும் பரிசு; செம குஷியில் பாஜக தலைவர்கள்!

இன்று எல்.முருகன் கொடுக்கும் பரிசு; செம குஷியில் பாஜக தலைவர்கள்!

தமிழகத்தில் தாமரையை மலரச் செய்யும் முயற்சியாக மத்திய, மாநில பாஜக தலைவர்கள் தீவிர களப் பணியாற்றி வந்தனர். தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் கட்சி ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினர். அதிலும் கடைசியாக தலைவர் பதவி வகித்த எல்.முருகன், செல்வாக்கு பெற்ற மாற்றுக் கட்சியினர், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரை பாஜகவிற்கு கொண்டு வந்தார்.
தங்களின் வெற்றிக் கணக்கைத் தொடங்க கட்சியினரை எல்.முருகன் பெரிதும் ஊக்கப்படுத்தினார். பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். கிராமங்கள் தோறும் பாஜகவை கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலம் அதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தந்தது.
இதன்மூலம் தங்களது வாக்கு வங்கியை அதிகரிக்க கடின உழைப்பை செலுத்தினர். இதற்கு பலனாக பாஜகவிற்கு 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், நாகர்கோவில் தொகுதியில் காந்தி, திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி தொகுதியில் சி.சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விஷயத்தில் அதிமுக உடனான கூட்டணியும் பெரிதாக கைகொடுத்தது. 20 தொகுதிகளை பெற்று அதில் 4 தொகுதிகளில் பாஜக வென்றிருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்டமன்றத்தில் பாஜகவினர் காலடி எடுத்து வைத்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்ததற்கு பரிசாக எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கி பாஜக தலைமை அழகு பார்த்தது.

No comments:

Post a Comment

Post Top Ad