பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல்; தமிழக அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல்; தமிழக அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு!

 பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல்; தமிழக அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. நோய்ப் பரவல் படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதற்கிடையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் அடிப்படை கணினி பயன்பாடு, தொழில்நுட்ப திறன்வளர் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) மற்றும் சம்கரா ஷிக்‌ஷா ஆகியவை இணைந்து செய்தன. இது ஐந்து நாட்கள் தொடர் பயிற்சியாக வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக 12,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன்மூலம் கணினி மற்றும் மொபைல் போன்களை எவ்வாறு கையாள்வது, ஆன்லைன் வகுப்புகளை நடத்த பல்வேறு கல்வி சார் தொழில்நுட்ப வசதிகளை எப்படி பயன்படுத்துவது,

இரண்டாம் கட்ட வகுப்புகள்

பள்ளிகளில் இருக்கும் ஹை-டெக் ஆய்வகங்களை பயன்படுத்துதல், EMIS இணையதளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 76,804 முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட கருத்தாளர்கள் மூலம் நாளை (ஆகஸ்ட் 23) முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad