சென்னை தினம்: மின்னொளியில் ஜொலிக்கும் ரிப்பன் கட்டடம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

சென்னை தினம்: மின்னொளியில் ஜொலிக்கும் ரிப்பன் கட்டடம்!

 சென்னை தினம்: மின்னொளியில் ஜொலிக்கும் ரிப்பன் கட்டடம்!


சென்னை தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை மாநகராட்சி இயங்கி வரும் ரிப்பன் கட்டடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கி.பி., 1639ம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியை நினைவூட்டும் வகையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து, ஒரு சிறு நிலத்தை வாங்கி, சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த தினத்தை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் என்ற பெயரின் சுருக்கமே சென்னை அழைக்கப்படுகிறது.

முன்பு, மெட்ராஸ் என இருந்த பெயர் 1996ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி தான், சென்னை என அதிகாரப்பூர்வ பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை மாநகரம் உருவாகி இந்த ஆண்டுடன் 382 ஆண்டுகள் நிறைவடைகின்றன

சென்னை தினத்தை கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி முதியவர்களுக்கு வீட்டுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. நாளையில் இருந்து ஒரு வாரம் சென்னை தினத்தை கொண்டாடவும் திட்டமிட்டுள்ள மாநகராட்சி, ரிப்பன் கட்டடத்தை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad