தேசியக் கொடியை அவமதித்ததா பா.ஜ.க.? - இறுதிச்சடங்கில் வெடித்த சர்ச்சை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

தேசியக் கொடியை அவமதித்ததா பா.ஜ.க.? - இறுதிச்சடங்கில் வெடித்த சர்ச்சை!

 தேசியக் கொடியை அவமதித்ததா பா.ஜ.க.? - இறுதிச்சடங்கில் வெடித்த சர்ச்சை!

மறைந்த உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை மறைக்கும் வகையில், பா.ஜ.க., கொடி வைக்கப்பட்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ.க., மூத்தத் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான கல்யாண் சிங் உடல் நலக்குறைவால் டெல்லியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 89. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், கல்யாண் சிங்கின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஆளுநராக பதவி வகித்தவர் என்பதால், கல்யாண் சிங்கின் உடல் மீது, தேசியக் காெடி போர்த்தப்பட்டிருந்தது. இவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.க., தேசியத் தலைவர் நட்டா அஞ்சலி செலுத்தும்போது, கல்யாண் சிங் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை பாதி அளவில் மறைக்கும் வகையில், பா.ஜ.க., கொடி போர்த்தப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad