மேக தாது அணை விவகாரம்: பதிலளித்த துரைமுருகன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 27, 2021

மேக தாது அணை விவகாரம்: பதிலளித்த துரைமுருகன்

மேக தாது அணை விவகாரம்: பதிலளித்த துரைமுருகன்

இருமொழிக் கொள்கை, காவேரி பிரச்சனையை நாம் ஒன்றுபட்டு கட்சி மாறுபாடு இன்றி ஒற்றுமையோடு இணைந்து இருந்தால் தமிழகத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தொடர்ந்து செல்கிறது. கர்நாடக முதலமைச்சர் அணையை கட்டியே தீருவோம் என கூறி வருகிறார். தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் இன்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவேரி நடுவர் மன்றத்தில் மேகதாது அணை பற்றி பேசக்கூடாது. வரும் 31ஆம் தேதி அந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. காவேரி பிரச்சனை, இருமொழிக் கொள்கை ஆகியவற்றில் நாம் ஒன்றுபட்டு கட்சி மாறுபாடு இன்றி இணைந்து இருந்தால் தமிழகத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு இணையான தீர்ப்பு. தடுக்க வேண்டியது தடுப்போம், வாதாட வேண்டியதை வாதாடுவோம், வெற்றி பெறுவோம் ” என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad