சென்னையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
தொழில்துறை வளர்ச்சி மற்றும் குடிமக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக 2000ஆம் ஆண்டின் முற்பகுதியில் தகவல் தொழில்நுட்பத்துறை பெறப்போகும் பிரம்மாண்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு ராஜீவ் காந்தி சாலை அதிவேக நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது.
மக்கள் பயன்பாட்டில்
முக்கிய பகுதியாக விளங்கும் இச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதையொட்டி OMR சாலையில் சுங்க வசூல் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.அதுகுறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால், ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம்,
கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment