செப்.16ஆம் தேதி டெல்லி செல்லும் ஸ்டாலின்: இதுதான் காரணம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 27, 2021

செப்.16ஆம் தேதி டெல்லி செல்லும் ஸ்டாலின்: இதுதான் காரணம்!

செப்.16ஆம் தேதி டெல்லி செல்லும் ஸ்டாலின்: இதுதான் காரணம்!



தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின் கடந்த ஜூன் மாதம் முதன்முறையாக டெல்லி சென்ற ஸ்டலின், பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான நலத்திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார். தொடர்ந்து, அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்தார்.

அதன்பிறகு, கடந்த ஜூலை மாதம் மறுபடியும் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிற செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை செப்டம்பர் 17ஆம் தேதி திறந்து வைக்கும் அவர், 18ஆம் தேதி வரை டெல்லியில் இருப்பார் என்றும் தெரிகிறது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தது. அதன்படி, டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில், திமுக கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ஆம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad