வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை: மாநகராட்சி அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை: மாநகராட்சி அதிரடி!

வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை: மாநகராட்சி அதிரடி!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்யும் திட்டத்தை பெருநகர பெங்களூரு மாநகராட்சி தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இதை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் மூன்றாவது அலையைத் தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போதே தொடங்கி விட்டன.

இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில், வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெருநகர பெங்களூரு மாநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வகையில், டாக்டர்ஸ் யுவர்ஸ் டோர்ஸ்டெப் என்ற பெயரில் மருத்துவக் குழு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெங்களூரில் உள்ள 54 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

ஒவ்வொரு குழுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை அறிவித்து வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், ஒரு முதலுதவி அளிப்பவர் இருப்பர்.
இந்த திட்டத்தின் மூலம் பெங்களூரில் உள்ள 27 லட்சம் குடும்பங்களுக்கு நேரடியாக வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மக்களிடம் இருந்து கொரோனா பயத்தை போக்கி தன்னம்பிக்கையை ஏற்படுத்த மாநகராட்சி முயற்சி செய்து வருவதாக மாநகாரட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad