"கொரோனா 3வது அலைக்கு இவங்க தான் காரணம்!" - சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

"கொரோனா 3வது அலைக்கு இவங்க தான் காரணம்!" - சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

"கொரோனா 3வது அலைக்கு இவங்க தான் காரணம்!" - சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

கொரோனா மூன்றாவது அலைக்கு பாரதிய ஜனதா கட்சியே காரணம் என, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டி உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் கோவையில் இன்று தொடங்கியது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

இக்கூட்டத்திற்கு பிறகு, சீத்தாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கொரோனா மூன்றாவது அலை நெருங்கி வரும் சூழலில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பு மருந்து இருப்பு குறித்து தெளிவான தகவலை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தமிழக முதல்வர் செங்கல்பட்டு, குன்னூர் ஆகிய பகுதிகளில் அனுமதி கேட்டுள்ளார்.



பெட்ரோலியப் பொருட்களுக்கு கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளால் மட்டுமே கடந்த 2020 - 21ம் ஆண்டில் ரூ.3.71 லட்சம் கோடியை மத்திய அரசு ஈட்டியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் மீது போடப்பட்ட வரியைக் குறைப்பதன் மூலமாகவே, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க முடியும். பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

பெகாசஸ் செயலி மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோர் உளவு பார்க்கப்பட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி இணையம் வழியாக 20 எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக கலந்து ஆலோசிக்க உள்ளோம்.


ஆப்கானிஸ்தானில் நடக்கும் நிலவரங்களை முன்னரே அறிந்தும், அந்நாட்டின் காபூலில் இருந்து இந்தியர்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது. அங்கிருந்து எத்தனை இந்தியர்கள் இங்கு அழைத்து வரப்பட்டனர் என்ற தகவல் மத்திய அரசிடம் இல்லை. தற்போது இந்தியாவில் 126 இடங்களில் பா.ஜ.க., யாத்திரை நடத்தி வருகிறது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமாகப் பரவுவதற்கு இந்த யாத்திரை வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad