'டிவிட்டர் பறவையை' எண்ணெயில் பொறித்து சுவைத்த காங்கிரஸ் தொண்டர்கள்..! வீடியோ - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

'டிவிட்டர் பறவையை' எண்ணெயில் பொறித்து சுவைத்த காங்கிரஸ் தொண்டர்கள்..! வீடியோ

'டிவிட்டர் பறவையை' எண்ணெயில் பொறித்து சுவைத்த காங்கிரஸ் தொண்டர்கள்..! வீடியோ

சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஒன்பது வயது சிறுமியின் பெற்றோரை சந்தித்து பேசியதான புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்தார்.
இதையடுத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் கணக்கை டிவிட்டர் முடக்கியது. ட்விட்டரில் 19 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட ராகுல் காந்தியின் கணக்கு முடக்கப்பட்டதால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டிவிட்டரின் செயல்பாடு பாரபட்சமாக இருப்பதாக சுட்டிக்காட்டி ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தும், அவர் பகிர்ந்த புகைப்படத்தை குறித்து விளக்கியும் வீடியோ வெளியிட்டார். அதனை தொடர்ந்து அவரது கணக்கை டிவிட்டர் நிறுவனம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.

ஆனால், அவர் பகிர்ந்த புகைப்படத்தை நீக்கியுள்ளது. இதற்கிடையில் ராகுல்காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதை கண்டித்து ஆந்திர மாநில காங்கிரஸ் தொண்டர்கள் டிவிட்டர் நிறுவனத்தை கண்டிக்கும் வகையில் 'டிவிட்டர் பறவையை' எண்ணெயில் பொறித்து டிவிட்டர் நிறுவனத்திற்கு கொரியர் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கவனம் பெற்றதுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad