கோடநாடு வழக்கை கையிலெடுத்தது ஏன்? - சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

கோடநாடு வழக்கை கையிலெடுத்தது ஏன்? - சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்!

 கோடநாடு வழக்கை கையிலெடுத்தது ஏன்? - சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்!

கோடநாடு வழக்கு விசாரணை சட்டப்படியே செல்கிறது என்றும், யாரையும் அச்சுறுத்தவோ, மிரட்டவோ இந்த வழக்கை ஆயுதமாகவோ அரசு பயன்படுத்தவில்லை என்றும் தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளும், அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படக்கூடிய சட்டக்கல்லூரிகளும், கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் நிறைவேற்றப்படும்.

திருச்சி சிறையில் உள்ள அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பாதுகாக்க மட்டுமே தமிழக சிறைத் துறையால் முடியும், அவர்களை வெளியே விடுவது மத்திய அரசின் கையில் தான் உள்ளது. கோடநாடு வழக்கு இன்னும் முடித்து வைக்கப்படவில்லை.சாட்சியங்கள் வாக்குமூலம் தர முன்வந்தால் கொடுக்கலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில்தான் வழக்கு செல்கின்றது. அதை விடுத்து யாரையும் அச்சுறுத்தவோ, மிரட்டவோ ஆயுதமாக கோடநாடு வழக்கை பயன்படுத்தவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதைத்தான் செய்து வருகின்றது. இதற்கு சிலர் கோபம் அடைவது, அரசை குறை கூறுவது நியாயமானது இல்லை.

No comments:

Post a Comment

Post Top Ad