தமிழக கல்லூரிகள் திறப்பு: ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 27, 2021

தமிழக கல்லூரிகள் திறப்பு: ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு!

தமிழக கல்லூரிகள் திறப்பு: ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு!


கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, வருகிற செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, பள்ளிகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இளநிலை இரண்டாம் ஆண்டு, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும். பொறியியல் படிப்புகளிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் நேரடி வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம்.

** அனைத்துக் கல்லூரிகளும்‌ தங்கள்‌ கல்லூரிகளில்‌ உள்ள அனைத்து வகுப்பறைகள்‌, நாற்காலிகள்‌, விளையாட்டுக் கருவிகள்‌, ஆய்வகங்கள்‌ போன்றவற்றைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்ய வேண்டும்‌.

** கட்டாயமாக அனைத்து மாணவர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாப்‌ பணியாளர்கள்‌ இரு தவணை தடுப்பூசிகளையும்‌ போட்டுக் கொண்டிருக்க வேண்டும்‌. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பணியாளர்கள்‌ (ஆசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாப்‌ பணியாளர்கள்‌) கட்டாய விடுப்பில்‌ அனுப்பப்படுவர்‌.



** தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் (மாணவர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாப்‌ பணியாளர்கள்‌) விவரங்களைத் தயார்‌ நிலையில்‌ வைத்திருக்குமாறும்‌, அரசு கோரும்‌போது உடன்‌ வழங்க

** கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளையே தொடர விரைவில்‌ முடிவு செய்யப்படும்‌. பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகக் கூட்டம்‌ கூட்டி பெற்றோர்களின்‌ ஆலோசனையைப் பெற வேண்டும்‌.

** சுகாதாரத்‌துறை அலுவலர்களைத் தொடர்புகொண்டு, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்குக் கல்லூரியிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்‌.



** நோய்த்‌தொற்று அறிகுறி உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால்‌, உடன்‌ அவருடன்‌ தொடர்பிலிருந்த அனைவருக்கும் ஆர்டி- பிசிஆர் சோதனை எடுக்க வேண்டும்‌. கல்லூரி வளாகத்தினுள்‌ பயன்படாத பிளாஸ்டிக்‌ கப், தேநீர்‌ கப், டயர்கள்‌, விஷ ஐந்துக்கள்‌ தஞ்சமடையும்‌ இடங்களை உடனே‌ அப்புறப்படுத்த வேண்டும்‌.

** மாற்றுத்திறனாளி மாணவர்கள்‌ கல்லூரிக்கு வருகை தர வேண்டிய அவசியமில்லை; சுத்தமான குடிநீர்‌ வசதியை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்‌.

** நுழைவு வாயில்‌ மற்றும்‌ வெளியேறும்‌ வழிகளில்‌ கண்காணிப்புக் குழு அமைத்து, வழிகாட்டு நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்‌. கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே கல்லூரி வளாகத்தினைச் சுத்தம்‌ செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad